மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மூலிகை கண்காட்சி
22-Jul-2025
போடி: போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமையில் நடந்தது. மாணவர்கள் தங்களது பெற்றோர் உதவியுடன் பாரம்பரிய உணவான கேழ்வரகு புட்டு, கோதுமை களி, வரகு அரிசி சாதம், கருப்பு கவுனி அரிசி கஞ்சி, பணியாரம், கோதுமை ரொட்டி, முளை கட்டிய பாசிப்பயறு, ராகி லட்டு, மாம்பழ அல்வா, கொழுக்கட்டை உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை காட்சிப் படுத்தினர். போடி வட்டார கல்வி அலுவலர் சுபாஷினி பார்வையிட்டு சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
22-Jul-2025