ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மூணாறு: மூணாறு, சைலன்ட்வாலி ரோட்டில் நகரையொட்டி நேற்று காலை திடிரென மரம் சாய்ந்தது. அந்த வழியில் குட்டியாறுவாலி, சைலன்ட்வாலி உள்பட பல்வேறு எஸ்டேட்டுகளுக்கு செல்ல வேண்டும். மரம் ரோட்டில் சாய்ந்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. அதனால் பணிக்கு சென்றவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாற்று வழியில் சென்றனர். மரம் வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது. அப்பகுதியில் சில மரங்கள் முறிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளதால், அவற்றை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.