மேலும் செய்திகள்
ஹிந்து எழுச்சி முன்னணி சப்-- கலெக்டரிடம் மனு
08-Nov-2024
டூவீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி
03-Nov-2024
பெரியகுளம், ; பெரியகுளம் நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில், வடுகபட்டி சேடபட்டியிலிருந்து தாமரைக்குளம் கல்லூரி விலக்கு வரை 3 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் மேம்பாடு பணியும், சப்-கலெக்டர் அலுவலகம் முதல் தாமரைக்குளம் வி.ஏ.ஓ., அலுவலகம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு ரோட்டின் இரு புறமும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியும். கல்லூரி விலக்கு பகுதியில் 10 மீட்டர் அகல ரோட்டினை, 17 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால் வாய்க்கால் மற்றும் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பகுதியில் சாக்கடை சிறு பாலம் கட்டுமானப்பணி துவங்கியது. உதவி பொறியாளர் சரவணன், சாலை ஆய்வாளர் சரவணன் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது. போக்குவரத்து மாற்றம்
நேற்று முதல் வடுகபட்டியிலிருந்து தாமரைக்குளம் வழியாக பெரியகுளம் மற்றும் தேனிக்கு செல்லும் கனரக வாகனங்கள், வடுகபட்டியிலிருந்து வைகை அணை ரோடு பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் வழியாக பெரியகுளம் செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.-
08-Nov-2024
03-Nov-2024