மேலும் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
11-Oct-2025
தேனி: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வீரபாண்டி ரோட்டை மூடி சென்றது. இதனால் முத்துத்தேவன்பட்டிபிரிவில் இருந்து கவுமாரியம்மன் கோவில் செல்லும் ரோட்டில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று முன் தினம் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீரபாண்டியில் நேற்று காலை முன்னோர் தர்ப்பணம் அளிக்கும் பகுதி, கண்ணீஸ்வர முடையார் கோவில் படித்துறை, இருபுறமும் உள்ள நெல் வயல்களை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. மதியம் 1:00 மணி அளவில் வெள்ளம் அதிகரித்து. இதனால் ஆற்றின் வடக்கு கரையில் நெல் வயல்களில் வெள்ளம் புகுந்து ரோட்டை கடந்து மீண்டும் ஆற்றிற்குள் சென்றது. இதனால் முத்துத்தேவன்பட்டி பிரிவில் இருந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் செல்லும் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்பகுதிகளை கலெக்டர் ரஞ்ஜீத்சிங், தாசில்தார் சதிஸ்குமார் ஆய்வு செய்தனர்.
11-Oct-2025