மாணவர்களுக்கு பயிற்சி
தேனி : இடைநிலை வகுப்புகளில் கற்றல் அடைவுத்திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கற்கும் திறன்களை அதிகரிப்பது அவசியம் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதற்கான இணைய வழி ஆலோசனைக் கூட்டம் சி.இ.ஓ., ஆபீசில் நடந்தது. நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி பங்கேற்றார். ஆறாம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கில வாசிப்புத்திறன், அடிப்படை கணிதம், கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க சிறப்பு பயிற்சி அளிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.