உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னையில் உற்பத்தி திறனை அதிகரிக்க பயிற்சி

தென்னையில் உற்பத்தி திறனை அதிகரிக்க பயிற்சி

ஆண்டிபட்டி: தென்னையில் தரமான தென்னகன்றுகள் உற்பத்தி மற்றும் தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்து 1000 விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 100 விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வைகை அணை மாநிலத் தென்னை பண்ணையில் 50 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் தென்னையில் தாய் மரங்களை தேர்வு செய்தல், நெற்றுகளை பதனிடும் முறைகள், நாற்றங்கால் அமைத்தல், நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, தென்னையில் உற்பத்தி திறனை அதிகரித்தல் குறித்து தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி இணை பேராசிரியர் சுந்தரய்யா, தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, பண்ணை மேலாளர் தீபிகாவிக்னேஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன் மற்றும் வட்டார அலுவலர்கள் நீதிநாதன், சிவக்குமார், பால்பாண்டி, அகில்ரகுமான், கோல்ராஜ் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி