உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நம்பர் பிளேட் இன்றி மண் அள்ளி செல்லும் டிராக்டர்கள்; கனிம கொள்ளையை தடுக்க கடிவாளம் தேவை

நம்பர் பிளேட் இன்றி மண் அள்ளி செல்லும் டிராக்டர்கள்; கனிம கொள்ளையை தடுக்க கடிவாளம் தேவை

தேனி : 'மாவட்டத்தில் 'நம்பர் பிளேட்' இல்லாமல் டிராக்டர்களில் மண், எம்.சாண்ட் உள்ளிட்டவை கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கனிமவளத்துறையினர், போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி, பெரியகுளம் போடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் நிலங்களில் மண், கல் வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. 'எவ்வளவு எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு நடை சீட்டுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட அளவை விட பல இடங்களில் அதிகம் எடுக்கப்படுவதும், ஆறுகள், ஓடைகளில் அனுமதி இன்றி மண் திருட்டு நடப்பதும் அதிகரிக்க துவங்கி உள்ளன. இவ்வாறு மண் திருட்டிற்கு டிராக்டர்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது தொடர்கிறது. இந்த டிராக்டர்களில் இணைக்கப்படும் 'டிரெய்லர்கள்' பதிவு எண் இன்றி இணைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அதிகாரிகள் பிடித்தாலும், டிரெய்லர்களை கழட்டி விட்டு தப்பி ஓடிவிடும் நிகழ்வுகளும் நடக்கின்றன. கனிம திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கனிமவளத்துறையினர், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை