உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணி மாற்றம் செய்த செயலரை மீண்டும் நியமிக்க தீர்ப்பாயம் உத்தரவு விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை

பணி மாற்றம் செய்த செயலரை மீண்டும் நியமிக்க தீர்ப்பாயம் உத்தரவு விவசாயிகள் மாற்றுத்தொழில் தேடி செல்லும் நிலை

மூணாறு: மூணாறு ஊராட்சியில் தலைவர் ராஜினாமா செய்த விவகாரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட செயலரை மீண்டும் பணியில் நியமிக்குமாறு கேரளா நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டது. மூணாறு ஊராட்சியில் தலைவராக பொறுப்பு வகித்த 3ம் வார்டு உறுப்பினர் தீபா தனது தலைவர் பொறுப்பை மார்ச் 29ல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை செயலர் உதயகுமாரிடம் வழங்கியபோது, அவர் விதிமுறைகள் மீறியதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக ஊராட்சியை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளாட்சி துறை தலைமை இயக்குனர், தேர்தல் கமிஷன் உள்பட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் செயலர் உதயகுமார் விதி மீறியதாக கூறி அவரை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி கோழிக்கோடு மாவட்டம் துனேரி ஊராட்சி செயலராக உதயகுமாரை பணியிட மாற்றம் செய்து உள்ளாட்சிதுறை தலைமை இயக்குனர் மே 14ல் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிராக உதயகுமார் கேரளா நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகினார். உதயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த தீர்ப்பாயம், சட்டப் பிரிவு 245 கே யின் கீழ் ஊராட்சி செயலருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை செல்லாது எனவும் அதனால் இடமாற்றம் உத்தரவை ரத்து செய்து இரண்டு வாரங்களுக்குள் மூணாறு ஊராட்சி செயலராக உதயகுமாரை மீண்டும் நியமிக்க வேண்டும் எனவும் தீர்ப்பாய நீதிபதி அப்துல்ரஹீம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ