மேலும் செய்திகள்
ரயில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி
11-Jul-2025
மூணாறு : மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் 2020 ஆக. 6ல் இரவு 10:45 மணிக்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தொழிலாளர்கள் குடியிருப்புகள் அடித்து செல்லப்பட்டன. அதில் சிக்கி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 70 பேர் பலியாகினர். பெட்டிமுடி சம்பவம் நடந்து ஐந்தாம் ஆண்டான நேற்று இறந்தவர்களை புதைக்கப்பட்ட இடத்தில் கே.டி.எச்.பி. கம்பெனி சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது மூணாறு சுப்பிரமணி சுவாமி கோயில் அர்ச்சகர் சங்கர நாராயண சர்மா, மவுண்ட் கார்மல் பேராலயம் பாதிரியார் லிஜோ ஆகியோர் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. கே.டி.எச்.பி. கம்பெனி நிர்வாக இயக்குனர் மாத்யூ ஆப்ரகாம், துணைதலைவர்கள் மோகன் சி. வர்க்கீஸ், கரியப்பா, ஹில் உட்பட இறந்தவர்களின் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
11-Jul-2025