உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருநங்கையை தாக்கிய இருவர் கைது

திருநங்கையை தாக்கிய இருவர் கைது

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவானி 28, திருநங்கையான இவர், தனது உறவினர்களுடன் வேலப்பர் கோயிலில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்குள்ள மண்டபம் அருகே சிவானி தனது தோழிகள் பொன்னியம்மாள், சாதனா, ரதி ஆகியோருடன் இருந்துள்ளார். அப்போது காமையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஆசைத்தளபதி, கருப்பசாமி 20, நவீன்குமார் 20, ஆகியோர் சிவானி மற்றும் அவரது தோழிகளுடன் தகராறு செய்து தாக்கி உள்ளனர். சம்பவம் குறித்து சிவானி புகாரில் ராஜதானி போலீசார் கருப்பசாமி, நவீன் குமார் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ