உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மது விற்ற இருவர் கைது

 மது விற்ற இருவர் கைது

தேனி: மேகமலையை சேர்ந்த ராமசாமி மகன் ராஜா 48. இவர் தும்மக்குண்டு மூலவைகை ஆற்றுப்பாலத்தின் அருகே மதுபானம் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. ராஜாவை கைதுசெய்து அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் 37. இவர் கோகிலாபுரம் வாய்கால்கரை அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்தார். தகவல் அறிந்து உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் ராம்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !