உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆந்திராவில் இருந்து தேனிக்கு டூவீலரில் 14 கிலோ கஞ்சா கடத்தல் இருவர் கைது

ஆந்திராவில் இருந்து தேனிக்கு டூவீலரில் 14 கிலோ கஞ்சா கடத்தல் இருவர் கைது

தேனி:தேனி மாவட்டம் தேவாரத்தில் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்துக்கு டூவீலரில் சென்று ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை வாங்கி கொண்டு கடத்தி வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் 32, கோம்பை ஈஸ்வரனை 40, போலீசார் கைது செய்தனர். தேனி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாக்கியம், எஸ்.ஐ., அருண் மற்றும் போலீசார் உப்புக்கோட்டை - டொம்புச்சேரி ரோடு கண்மாய் அருகே ரோந்து சென்றனர். அவ்வழியாக தேவாரத்தைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன் டூவீலரை ஓட்டி வர கோம்பை ரெங்கநாதபுரம் வடக்குத்தெரு டிரைவர் ஈஸ்வரன் அமர்ந்து வந்தார். அவர்களை சோதனையிட்டதில் பாலமுருகன் பேக்கில் 8 கிலோ 141 கிராம் கஞ்சா, ஈஸ்வரன் பேக்கில் 6 கிலோ 223 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மொத்தம் ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள 14 கிலோ 364 கிராம் கஞ்சா, 2 அலைபேசிகள், ஒரு டூவீலரை கைப்பற்றி இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தேனியில் இருந்து விசாகபட்டினத்திற்கு டூவீலரிலேயே 1200 கி.மீ., துாரம் குறுக்கு வழித்தடங்களில் சென்று அங்கு சில்லரை விற்பனையில் கிடைக்கும் கஞ்சாவை வாங்கி கடத்தி வந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ