உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலியிடம் சிக்கி இரு பசுக்கள் பலி

புலியிடம் சிக்கி இரு பசுக்கள் பலி

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சைலன்ட் வாலி எஸ்டேட், 2வது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு பசுக்கள் புலியிடம் சிக்கி இறந்தன. அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ஜேக்கப்புக்கு சொந்தமான இரண்டு பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அவற்றை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. இந்நிலையில் அவை அப்பகுதியில் உள்ள 3ம் எண் தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்ததை நேற்று பார்த்தனர். அவற்றை புலி தாக்கி கொன்றதாக தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை