உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் மீது வேன் மோதி இருவர் காயம்

டூவீலர் மீது வேன் மோதி இருவர் காயம்

தேவதானப்பட்டி : கொடைக்கானல் பள்ளங்கியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் 37. இவரது நண்பர் அருண்பாண்டி 29. இருவரும் தேனியில் துக்க நிகழ்வில் பங்கேற்று கொடைக்கானல் சென்றனர். டூவீலரை அருண்பாண்டி ஓட்டினார். டி.காமக்கப்பட்டி சோதனை சாவடியிலிருந்து கொடைக்கானல் ரோடு மூன்றாவது வளைவில், எதிரே வந்த வேன், டூவீலர் மீது மோதியது. இதில் ரஞ்சித்குமார், அருண்பாண்டி காயமடைந்தனர். இருவரும் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசார் கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட வேனை போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி