மேலும் செய்திகள்
அனைத்து அலுவலகங்களிலும் கொடியேற்ற வலியுறுத்தல்
11-Aug-2025
போடி: தேனி மாவட்டம் போடியில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த இரு பள்ளி வாசல்களின் அலுவலகங்களுக்கு நேற்று வக்பு வாரிய அதிகாரிகள் 'சீல் ' வைத்தனர். போடி முகைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல், புதுாரில் காதர் அவுலியா தர்கா பள்ளிவாசல் உள்ளன. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் 13 ஆண்டுகளாக அது நடக்கவில்லை. அதுகுறித்த புகாரில் வக்பு வாரியம் தெரிவித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கவில்லை. ஏற்கனவே உள்ளோர் பதவி விலகவில்லை. வக்பு வாரியம் விசாரித்தும் நிர்வாகம் உடன்படவில்லை. இதனையடுத்து நேற்று போடியில் இப்பள்ளிவாசல்களின் சொத்துக்கள், நிர்வாக செயல்பாடுகள், பரிவர்த்தனைகள் முழுவதும் வக்பு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் வகையில் கண்காணிப்பாளர் காதர் ஷரீப் தலைமையில் வருவாய்த்துறை, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டன.
11-Aug-2025