உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விபத்திற்கு வழிவகுக்கும் டூவீலர் விதிமீறல்கள்

விபத்திற்கு வழிவகுக்கும் டூவீலர் விதிமீறல்கள்

தேனி; மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் டூவீலர் ஓட்டி விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கண்டு கொள்ளததால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டூவீலர்களில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பயணிப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக தேனி, அல்லிநகரம், பெரியகுளம் ரோடு, பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு, சமதர்மபுரம் பகுதிகளில் அதிகளவில் பள்ளி சிறுவர்கள் டூவீலர்கள் ஓட்டுகின்றனர். 18 வயது பூர்த்தியாகாதவர்கள், டூவீலர் ஓட்டக்கூடாது என்ற விதி இருந்தும் அவை கானல் நீராகவே உள்ளது. பள்ளி மாணவர்கள் டூவீலர்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன. போலீசாரும் பள்ளி மாணவர்களை கண்டு கொள்வதில்லை. இதற்கு பெற்றோர் பலரும் மாணவர்கள் டூவீலர்கள் இயக்குவதை ஊக்குவிக்கின்றனர். இவர்கள் விபத்துக்களில் சிக்கும் போது மட்டும் கண்ணீர் விடுகின்றனர். பள்ளி நிர்வாகங்கள், போலீசார் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலீசார் விதி மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ