மேலும் செய்திகள்
தவளக்குப்பத்தில் பளு துாக்கும் போட்டி
07-Nov-2024
தேக்வோண்டா போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
31-Oct-2024
கூடலுார் : பல்கலைக்கழக அளவிலான கோ கோ போட்டியில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லுாரிகளுக்கு இடையேயான கோ கோ போட்டி கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் 2 நாட்கள் நடந்தது. தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 13 கல்லுாரிகள் கலந்து கொண்டன.இறுதிப் போட்டியில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியும், திண்டுக்கல் செயின்ட் அந்தோணிஸ் மகளிர் கல்லுாரியும் விளையாடின.போட்டியை கல்லுாரி செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, முதல்வர் ரேணுகா, பல்கலைக் கழக உடற்கல்வி உதவி இயக்குனர் ராஜம் முன்னிலை வகித்தனர். இதில் ஆதிசுஞ்சனகிரி கல்லுாரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. மூன்றாம் இடத்தை திண்டுக்கல் பான் செக்கர்ஸ் கல்லுாரியும், நான்காம் இடத்தை பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லுாரியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. உடற்கல்வி பொறுப்பாளர் சுசிலா, உடற்கல்வி ஆசிரியை சூரிய பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
07-Nov-2024
31-Oct-2024