பல்கலை மண்டல கூடைப்பந்து போட்டி
தேனி: அண்ணா பல்கலை மண்டல அளவிலான மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் நடந்தது. தேனி வனசரகர் சிவராம் போட்டிகளை துவக்கி வைத்தார். திண்டுக்கல், கரூர், விருதுநகர் தேனி மாவட்டங்களில் இருந்து பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்றன. முதலிடத்தை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, 2ம் இடத்தை தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, 3ம் இடத்தை கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரிகள் வென்றன. வெற்றி பெற்ற அணிகள்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டிகளை கல்லுாரி நிர்வாகத்தினர் ஒருங்கிணைத்தனர்.