மேலும் செய்திகள்
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கல்
23-Apr-2025
தேனி : தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் புதிய கட்டடங்கள், திருவள்ளூர் சிலை சிறப்பு விழா நடந்தது. உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். அலுவலக கட்டடத்தை டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார். திருவள்ளுவர் சிலையை சென்னை ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் திறந்து வைத்து பேசுகையில், 'வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல தன்னம்பிக்கை, நேர்த்தியான திட்டமிடல் முக்கியம். முன்னேற்றத்திற்கு மனதில் தெளிவும், உழைப்பும் அவசியம். தோல்வி என்பது ஒரு அனுபவம் மட்டுமே. அதனை பலமாகவும், பாடமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்வியை நேர்மையுடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டும் சமூகத்தை மேம்படுத்தும்,'என்றனர். விழாவை கல்லுாரி முதல்வர் சித்ரா தலைமையில் டீன் கோமதி, சி.ஓ.இ., சரண்யா, துணை முதல்வர் சுசீலா சங்கர் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
23-Apr-2025