உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சின்னமனூரில் மொத்த காய்கறி வணிக வளாகம் செயல்படுத்த வலியுறுத்தல்

சின்னமனூரில் மொத்த காய்கறி வணிக வளாகம் செயல்படுத்த வலியுறுத்தல்

சின்னமனூர்: சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூரில் ஹைவேவிஸ் செல்லும் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. இது வேளாண் வணிக துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 5 ஏக்கர் நிலத்தை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு வழங்கினர். அங்கு உதவி இயக்குனர் அலுவலகங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 3 ஏக்கரில் தோட்டக்கலைத்துறை 500 சதுர மீட்டர் பரப்பில் நிழற் வளை கூடம் அமைத்தது. அதில் கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகளை வளர்த்து விவசாயிகள் வாங்கி கொள்ள உதவும் வகையில் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நர்சரியும் செயல்படவில்லை. இந்நிலையில் வேளாண் வணிக துறையினர் மொத்த காய்கறி விற்பனை வளாகம் இங்கு அமைக்க முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. சுமார் 70 கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த திட்டம் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.இடப் பிரச்னையில் வேளாண் வணிக துறையும், தோட்டக்கலைத்துறையும் முரண்பட்டதால் தேக்கநிலை ஏற்பட்டது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மொத்த காய்கறி வணிக வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி