சின்னமனுாரில் சிறுநீர் கழிப்பிடம் அவசியம்
சின்னமனூர் : சின்னமனூர் நகராட்சி 27 வார்டுகளை கொண்டதாகும். 50 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். சின்னமனூரில் பஸ் ஸ்டாண்டில் இருந்து காந்தி சிலை வரையும், வடக்கு ரத வீதி, சீப்பாலக்கோட்டை ரோடு ஆகிய பகுதிகளிலும் அதிக கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வேலை செய்வோர், கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருபவர்களும், இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக சின்னமனூர் மெயின் ரோட்டில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.