உத்தமபாளையம் விகாசா பள்ளி சாதனை
உத்தமபாளையம்: தேனி மாவட்ட தடகள போட்டிகளில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஈட்டி, குண்டு எறிதலில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.மாவட்ட தடகள விளையாட்டு போட்டிகள் ராயப்பன்பட்டி எஸ். யூ. எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஈட்டி எறிதல் போட்டியில் உத்தமபாளையம் விகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் ஹரிஜித் ராஜ், 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 42 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம் மாநில போட்டிக்கு தேனி மாவட்டம் சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இப்பள்ளி 9 ம் வகுப்பு மாணவர் தருண் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற சாதனை மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சஞ்சீவ்குமார், ஒபிலியா ஆகியோரை பள்ளியின் தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி , முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.