உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை மீன்களுக்கு தட்டுப்பாடு

வைகை அணை மீன்களுக்கு தட்டுப்பாடு

ஆண்டிபட்டி: வைகை அணையில் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வைகை அணை நீர் தேக்கத்தில் கட்லா, மிருகாள், ரோகு வகை மீன் குஞ்சுகள் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வளர்ப்புக்காக விடப்படுகிறது. நீர்த்தேக்கத்தில் இயற்கையாக வளரும் ஆறா, சொட்டை வாளை, ஜிலேபி வகை மீன்களும் உள்ளன. வளர்ந்த மீன்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் 50 க்கும் மேற்பட்ட பரிசல்களில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்கின்றனர். பிடித்து வரும் மீன்கள் காலை 7:00 மணி முதல் 10:00 மணிவரை ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வைகை அணையில் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வரத்து குறைவால் மீன்கள் கிராக்கியுடன் விற்பனை ஆகிறது.மீன்பிடி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக வைகை அணை பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் மீன்கள் நீரின் அடிப்பகுதிக்கு சென்று விடுகிறது. நீர்மட்டமும் கடந்த சில வாரங்களாக 55 அடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் வலை விரித்தாலும் மீன்கள் சிக்குவதில்லை. தினமும் 2 டன் வரை பிடிபட்ட மீன்களின் அளவு தற்போது தினமும் 500 கிலோவுக்கும் குறைவாகவே இருப்பதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வைகை அணையில் பிடிக்கப்பட்டு விற்கப்படும் மீன்கள் கிலோ ரூ.140 என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை