உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  நான்கு ஓட்டுகள் பதிவானவெள்ளிமலை

 நான்கு ஓட்டுகள் பதிவானவெள்ளிமலை

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 5 ஓட்டுகளில் 4 ஓட்டுகள் பதிவானது. வெள்ளிமலையில் துரைசாமி மரகதம் ஆரம்ப பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைந்துள்ளது. இந்த ஓட்டுச்சாவடியில் 3 ஆண்கள், இரு பெண்கள் உட்பட 5 வாக்காளர்கள் உள்ளனர். தேனியில் இருந்து 6 மணி நேரம் பயணம் மேற்கொண்டு தேர்தல் அலுவலர்கள் இந்த ஓட்டுச்சாவடியை சென்றடைந்தனர். ஓட்டுப்பதிவின் போது பட்டியலில் இடம் பெற்றிருந்த 4 வாக்காளர்கள் காலை 9:00 மணிக்கு முன்பே ஓட்டளித்தனர். ஒருவர் ஓட்டளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை