உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிராம கோயில் பூஜாரிகள் பேரவை கூட்டம்

கிராம கோயில் பூஜாரிகள் பேரவை கூட்டம்

தேனி: வீரபாண்டியில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை, அருவாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் சாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதசம்பளம் ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும். பூஜாரிகள் மறைவிற்கு பின் அவர்கள் மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி மாவட்ட தலைவர் ராஜா, துணைத்தலைவர் பார்த்தசாரதி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி, தேனி மாவட்ட செயலாளர் வேல்முருகன், துணைச்செயலாளர் மணி, பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை