உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் சுவர் ஓவியங்கள்; டாக்டர்கள், தன்னார்வலர்கள் புதிய முயற்சி

அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் சுவர் ஓவியங்கள்; டாக்டர்கள், தன்னார்வலர்கள் புதிய முயற்சி

தேனி : தேனி அரசு மனநல மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர்கள், தன்னார்வலர்களின் முயற்சியால் புதுமையனா, தொன்மையான ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. தேனி சமதர்மபுரத்தில் இம்மருத்துவமனை வளாகம் உள்ளது. இங்கு மறுவாழ்வு மையமும் செயல்படுகிறது. இந்த வளாகத்தில் உட்புறம் மற்றும் வெளிபுறத்தில் புதுமையான ஓவியங்கள் தீட்டும் பணிகள் மருத்துவக் கல்லுாரி முதல்வர் முத்துச்சித்ரா, மருத்துவ அலுவலர்கள் முன்னெடுப்பில் துவங்கப்பட்டு உள்ளன. இப்பணிகளை உளவியல் டாக்டர்கள் முகமது ஷபி, ராஜேஷ்கண்ணன், சினிமா தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ், சென்னை ஓவியக் கல்லுாரி பேராசிரியர் மணிவண்ணன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., மகேந்திரன் மேற்கொண்டு உள்ளனர். ஓவியங்கள் பற்றி டாக்டர் முகமது ஷபி கூறியதாவது: ஓவியங்கள் ஒருவிதமான தெரப்பி ஆகும். ஒவ்வொரு முறை பல வண்ணங்களை பார்க்கும் போது மன நிலை மாறுபடும். இது சிகிச்சைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும்., என்றார். பேராசிரியர் மணிவண்ணன் கூறியதாவது: நீலகிரி, விழுப்புரம், கோவை மாவட்டங்களில் உள்ள தொன்மையான குகை ஓவியங்கள், 'மல்டி கலர்' ஓவியங்கள், பாரம்பரிய ஓவியங்கள், மோனோ கலர் ஓவியங்கள், 3 நிறங்கள் உடைய சென்சில்கட் ஓவியங்கள் சுவர்களில் வரைந்துள்ளோம். துவக்க நாளில் மாவட்டத்தை சேர்ந்த சில பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று ஓவியங்கள் வரைந்தனர். ஒவ்வொரு ஓவியமும் பார்க்கும் கோணத்தில் பல்வேறு அர்த்தகங்களை வழங்கும்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை