உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் 7 நாட்களுக்குப் பின் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.வைகை அணையில் இருந்த நீர் ஜூன் 15 முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஜூன் 25ல் வினாடிக்கு 3000 கன அடி வீதம் ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு நேற்று காலை நிறுத்தப்பட்டது. கடந்த ஏழு நாட்களில் அணையில் இருந்து ஆற்றின் வழியாக ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்கு 1251 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக நீர் வெளியேற்றம் தொடர்கிறது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 59.02 அடி. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1662 கன அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி