உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இணையவழி கருத்தரங்கம்

இணையவழி கருத்தரங்கம்

தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் டிஜிட்டல் மின் இதழ்கள் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். பெங்களுரூ சவுத் இன்பர்மேட்டிக்ஸ் பப்ளிசிங் நிறுவன பயிற்சி மேலாளர் ரித்தீஷ் ஐயர் இணைய வழி மூலம் பங்கேற்றார். அவர் மின் இதழ்கள், பன்னாட்டு மின் இதழ்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்தல், பயன்பாடுகளை விளக்கினார்.கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் கல்லுாரி துணை முதல்வர்கள், வேலை வாய்ப்பு அலுவலர், பேராசிரியர்கள் கருத்தரங்க ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை