உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனீ, காளான் வளர்ப்பு பயிற்சிக்கு வரவேற்பு

தேனீ, காளான் வளர்ப்பு பயிற்சிக்கு வரவேற்பு

தேனி, செப்.23– கருவேல்நாயக்கன்பட்டி ரோட்டில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் அருகே செயல்படும் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் அக்.,1 முதல் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி 10 நாட்களும், தேனீ வளர்ப்பு பயிற்சி 20 நாட்கள் வழங்கப்பட உள்ளது. 18 வயது முதல் 50 வயதுடைய கிராம பகுதியினர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி, தங்குமிடம், உணவு இலவசம். காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடக்கும். மத்திய அரசு சான்றிதழ், தொழில் துவங்க வங்கி கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், ஆதார் நகலுடன் அக்.,1 க்குள் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 94427 58363 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் ஆனந்த பாலாஜி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை