விமான நிலைய பணிக்கான சான்றிதழ் படிப்பிற்கு வரவேற்பு
தேனி: தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு விமான நிலையங்களில் பணிபுரியவதற்கான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்பட உள்ளன. சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் விமான நிலைய பயணிகள் சேவை, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, பயண முன்பதிவு உள்ளிட்ட பிரிவுகளில் 6மாத பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 18-23 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். பயிற்சி தொகை, விடுதியில் தங்கி படிக்கும் தொகையை தாட்கோ செலுத்தும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.comஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக தாட்கோ பிரிவை அணுகலாம் அல்லது 04546 -260995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.