மரபு சாரா தீவன வளர்ப்புக்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி வழிகாட்டுமா
கம்பம: தேனி மாவட்டத்தில் வளர்க்கப்படும் பாரம்பரியமான மலைமாடுகளுக்கு தீவன பிரச்னை உள்ளதால் மரபு சாரா தீவன வளர்ப்பு பயிற்சியை கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் வழங்க வேண்டும்.மாவட்டத்தில் சின்ன ஒவுலாபுரம், ராயப்பன்பட்டி, எரசக்கநாயக்கனுார், முத்துலாபுரம், காமாட்சிபுரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் மலைமாடுகள் எனும் நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகிறது. மலைமாடு வளர்ப்பவர்களுக்கு பிரதான பிரச்னையாக உள்ள தீவன பிரச்னையில் யாரும் கவனம் செலுத்தவில்லை. மாவட்டத்தில் வனப்பகுதிகள் புலிகள் காப்பகமாக மாறியதால், மேய்ச்சலுக்கு செல்ல மாடுகளை அனுமதிக்க மறுக்கின்றனர்.இந்த நிலையில் மாடு வளர்ப்பவர்களுக்கு உள்ள தீவன பிரச்னையை தீர்க்க, கால்நடை மருத்துவக்கல்லுாரி வழிகாட்ட வேண்டும். சின்ன ஓவுலாபுரத்தில் இதற்காக கூட்டம் நடத்தினார்கள். மரபுசாரா தீவனங்கள் வளர்க்க தாடிச்சேரி, தப்புக் குண்டு, தேவாரம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. ஆனால் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. எனவே மரபு சாரா தீவன உற்பத்தி திட்டம் துவக்க வேண்டும். மலை மாடுகள் வளர்ப்பவர்களுக்கும் இது தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் மலைமாடுகளின் பசி போக்கப்படும்.