உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு

ஆய்வு ரயில் மோதியதில் பெண், 15 ஆடுகள் சாவு

தேனி: மதுரையில் இருந்த போடி சென்ற ஆய்வு ரயில் மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 ஆடுகளும் உயிரிழந்தன. தேனி, அரண்மனைப்புதுாரை சேர்ந்தவர் சின்னக்காளை. இவரது மனைவி பத்ரகாளி, 55, ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று ஆடுகளை மதுரை சாலையில் உள்ள ராஜாகுளம் கண்மாய்க்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். நேற்று மாலை, ஆடுகளை தண்டவாளம் வழியாக வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது, அவ்வழியாக மதுரையில் இருந்து போடி சென்று கொண்டிருந்த ஆய்வு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பத்ரகாளி பலியானார். மேலும், 15 ஆடுகளும் உடல் சிதறி பலியாகின. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !