உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி

போடி: போடி அருகே மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோட்டில் வசித்தவர் போதுமணி 54. கூலித் தொழிலாளி. இவர் நேற்று மீனாட்சிபுரத்தில் உள்ள ஜெயராஜ் என்பவரின் வயலில் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். வயல் அருகே மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி அருந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் போதுமணி நடந்த சென்ற போது மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்த்தினர் போதுமணியை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி