உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காணை நோய் தடுப்பூசி 1 .10 லட்சம் டோஸ் அனுமதி ; பசுக்களுக்கு செலுத்தும் பணி துவக்கம்

காணை நோய் தடுப்பூசி 1 .10 லட்சம் டோஸ் அனுமதி ; பசுக்களுக்கு செலுத்தும் பணி துவக்கம்

கம்பம் : பசுக்களுக்கு காணை நோய் தடுப்பூசி போடும் பணியினை கால்நடை பராமரிப்புத் துறை நேற்று துவக்கியது. தேனி மாவட்டத்திற்கு 1.10 லட்சம் டோஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.ஆண்டிற்கு இரண்டு முறை பசுக்களுக்கு காணை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசு இந்த தடுப்பூசி போடும் பணியை செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பரில் இம்முகாம் நடைபெறும்.இந்தாண்டு கடந்த ஜுனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கி ஜூலை 7 ல் நிறைவடைந்தது. மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 8 ஆயிரம் டோஸ் செலுத்தப்பட்டது. மேகமலை பகுதியில் உள்ள 210 மாடுகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்தாண்டிற்கான இரண்டாவது ரவுண்ட் நேற்று காலை துவங்கியது. மாவட்டத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் டோஸ் அனுமதிக்கப்பட்டுள்ளது.வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்று ஜனவரி 15 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை