உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டு யானை தாக்கி தொழிலாளி காயம்

காட்டு யானை தாக்கி தொழிலாளி காயம்

மூணாறு : இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.வண்டிபெரியாறு அருகே மவுண்ட் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் தொழிலாளி அந்தோணி 60. காபி தோட்டத்தில் வேலை செய்து வந்த அந்தோணி டீ குடிப்பதற்காக ரோட்டிற்கு வந்தார். அப்போது ரோட்டில் நடமாடிய காட்டு யானையிடம் எதிர்பாராத வகையில் சிக்கினார். அவரை காட்டு யானை தாக்கியது. அதனை பார்த்த சக தொழிலாளர்கள் பலமாக கூச்சலிட்டு யானையை துரத்தினர். உயிர் தப்பிய அந்தோணி கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை