உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மயிலுக்கு உணவு தரும் தொழிலாளர்கள்

மயிலுக்கு உணவு தரும் தொழிலாளர்கள்

மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான வாகுவாரை எஸ்டேட் லோயர் டிவிஷனில் தொழிலாளர்களுடன் இணக்கமான ஆண் மயிலுக்கு உணவு அளித்து வருகின்றனர்.மூணாறு பகுதியில் நிலவும் காலநிலை மயில்கள் வாழ உகந்தது இல்லை என்றபோதும் கடந்த சில ஆண்டுகளாக மயில்கள் நடமாடி வருகின்றன. மூணாறு அருகில் உள்ள பெரியவாரை, கன்னிமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் நடமாடின. அவை, அப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து தற்போது வாகுவாரை எஸ்டேட், லோயர் டிவிஷனில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன. அவற்றில் ஆண் மயில் ஒன்று தொழிலாளர்களுடன் இணக்கமானது. அந்த மயிலுக்கு தொழிலாளர்கள் பழங்கள்,பல்வேறு உணவுகளை அளித்து வருகின்றனர். உணவுக்காக மயிலும் அச்சம் இன்றி தொழிலாளர்களின் அருகில் செல்கிறது. வன உயிரினங்களுக்கு உணவு அளிப்பது சட்டப்படி விதிமுறை மீறல் என்றபோதும் அதனை குறித்து விழிப்புணர்வு இன்றி தொழிலாளர் மயிலுக்கு உணவு அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ