உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக தாய்ப்பால் வார விழா விழப்புணர்வு கருத்தரங்கு

உலக தாய்ப்பால் வார விழா விழப்புணர்வு கருத்தரங்கு

தேனி : அரப்படித்தேவன்பட்டி என்.ஆர்.டி., நர்சிங் கல்லுாரியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் நல சிகிச்சைத்துறையின் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பொன்விஜய் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். கல்லுாரியின் நிர்வாக அலுவலர் ஹேமா முன்னிலை வகித்தார். மருத்துவக்கல்லுாரியின் குழந்தைகள் நல சிகிச்சைத்துறையின் டாக்டர்கள் விசாலாட்சி, தாய்பால் வழங்கும் விதம், தாய்ப்பால் குழந்தைகளுக்கு வழங்குவதால் தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றங்களின் நன்மை, தீமைகள் குறித்தும், தாய்ப்பால் வழங்கும் நடைமுறைகள் குறித்து பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் மாணவிகளுக்கு விளக்கினார். டாக்டர் உத்தராசெல்வி, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம், தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். நர்சிங் கல்லுாரி உதவி பேராசிரியர் மகாலட்சுமி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை