உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மீன் வளர்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

மீன் வளர்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: மாவட்டத்தில் மீனவர் நலத்துறை சார்பில் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மீன்வளர்ப்பு மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மானியத்தில் மீன் விரலிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு எக்டேர் மீன் பண்ணையில் 10 ஆயிரம் மீன் விரலிகள் இருப்பு செய்ய ரூ.5ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 5 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வைகை அணையில் பூங்கா ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். அல்லது 94872 61528 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ