உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தேனி: ''பெரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.'' என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் பிரசன்ன மணிகண்டன் கூறியதாவது: சொட்டு நீர் பாசன முறை பயன்படுத்துவதால் 40 முதல் 60 சதவீதம் வரை தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மேலும் வேர் பகுதிக்கு மட்டும் நீர், உரம் வழங்குவதால் பயிர் வளர்ச்சி நன்றாக இருக்கும். களைகள் வளர்வது தவிர்க்கப்படும். பூச்சி, பூஞ்சை நோய்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். வேலையாட்கள் அதிகம் தேவையில்லை. பெரியகுளம் வட்டாரத்திற்கு நடப்பாண்டில் 110 எக்டேரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.1.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பெரியகுளம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !