உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்

தேனி: வாக்காளர் பெயர் பட்டியிலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நேற்று நடந்தது. இதில் பெயர் சேர்க்க 18 வயது துவங்கிய இளம் வாக்காளர்கள் ஆர்வமாக விண்ணப்பங்களை வழங்கினர். அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பெயர் சேர்த்தல், திருத்தத்திற்காக கட்சியினர் விண்ணப்பங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். கலெக்டர் ஷஜீவனா தேனி கொண்டுராஜா உயர்நிலைப்பள்ளி, குன்னுார் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஓட்டுச்சாவடி மையங்களில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !