உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / உலக மக்கள் தொகை தின போட்டிமாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உலக மக்கள் தொகை தின போட்டிமாணவர்களுக்கு பரிசு வழங்கல்

திருநெல்வேலி:நெல்லையில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது.நெல்லை அறிவியல் மையத்தில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார். மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் சுப்பிரமணியம் வரவேற்றார்.கல்லூரி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற கார்த்திகா, இசக்கியம்மாள், வின்சி புளோரா மற்றும் சுப்புலட்சுமி ஆகியோருக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராம்நாத், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மனோகரன், கண்காணிப்பாளர் ஜிம்லா பாலச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா முகைதீன், சங்கரன்கோவில் துணை இயக்குனர் கலு.சிவலிங்கம், அறிவியல் மைய அலுவலர் சீதாராம், பல்கலைக் கழக என்.எஸ்.எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமிதாஸ், விரிவாக்க கல்வியாளர் முருகன், ஜனப் பிரியா தொண்டு நிறுவனம் ஜான்சன் உட்பட பலர் பேசினர்.மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்