மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:மேலப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்ட பொதுக்குழு கூட்டம் அலுவகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில மேலாண்மைக் குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாநில செயலாளர் அப்துல் ஹமீத், மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைவராக யூசுப் அலியும், மாவட்ட செயலாளராக செய்யது அலியும், மாவட்ட துணை தலைவராக வல்லம் அகமது உட்பட பலர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்ட்டனர்.கூட்டத்தில் மேலப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும், பிளாட்பார்ம் அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், காஸ், கெரசின் விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். செங்கோட்டையிலிருந்து ஈரோட்டிற்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும். கடையநல்லூரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க 22 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும். பாளை., கேடிசி., நகர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டன.
29-Sep-2025
25-Sep-2025