உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி நகராட்சி தலைவருக்கு திமுக வேட்பாளர் வேட்பு மனு

தென்காசி நகராட்சி தலைவருக்கு திமுக வேட்பாளர் வேட்பு மனு

தென்காசி : தென்காசி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வேட்பாளர் சீதாலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்காசி நகராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க.வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று தென்காசி நகராட்சி அலுவலகம் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் செழியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது நகர செயலாளர் ஆயான் நடராஜன், மாவட்ட பிரதிநிதி பாலாமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா உடனிருந்தனர்.

முன்னதாக வேட்பாளர் சீதாலட்சுமி நகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இதில் வேட்பாளரின் கணவர் ஜெயபால், முன்னாள் துணைத் தலைவர் நிசார் முகமது இஸ்மாயில், மேலகரம் செயலாளர் சுடலை, சுப்பிரமணியன், பாலராஜ், வீரபாண்டி மற்றும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை