மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:தேசிய நில ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் 2.78 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.நில ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நெல்லை, பாளை, சங்கரன்கோவில், தென்காசி, சிவகிரி, செங்கோட்டை, அம்பை, ராதாபுரம், நான்குநேரி, வீ.கே புதூர், ஆலங்குளம் ஆகிய 11 தாலுகாக்களில் கம்ப்யூட்டர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களில் ஆன்-லைன் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதிகள் முழு அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நில ஆவணங்கள் நகல் வழங்கிய வகையில் 2 கோடியே 78 லட்சத்து 72 ஆயிரத்து 240 ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.மாவட்டத்தில் நெல்லை, பாளை, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, அம்பை மற்றும் நான்குநேரி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வட்ட மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இடையே வெப்சைட் அமைக்கப்பட்டுள்ளது. பாளை, நெல்லை, அம்பை மற்றும் தென்காசி ஆகிய தாலுகாக்களில் தொடு திரை தகவல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு அளவில் இந்த மேடைகள் இயங்காத நிலை நிலவுகிறது.2011-12ம் ஆண்டில் முதல் காலாண்டிற்கு தேசிய நில ஆவணங்கள் சம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு பெறப்படாத நிலை நிலவுகிறது. தேசிய நில ஆவணங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தை முழு அளவிலும், பொதுமக்கள் பயன் பெறத்தக்க வகையிலும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
29-Sep-2025
25-Sep-2025