மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள பழைய சிக்னலுக்கு பதிலாக அதி நவீன சிக்னல்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.நெல்லை மாநகரில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரோடு வசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.இதனை கருத்தில் கொண்டு மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நெல்லை ஜங்ஷன் அண்ணாசிலை, தேவர் சிலை, பரணி பாயின்ட், டவுன் சொக்கபனை சந்திப்பு, டவுன் ஆர்ச், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, முருகன் குறிச்சி,பாளை., பஸ் ஸ்டாண்ட், வீரமாணிக்கபுரம் ஜங்ஷன் போன்ற பகுதிகளில் எல்சிடி., பல்புகள் கொண்ட சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
இந்த சிக்னல்களின் வெளிச்சம் பகல் நேரங்களில் சரிவர தெரியாமல் இருந்ததால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக சென்றதால் அடிக்கடி போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டது.இதனைகருத்தில் கொண்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவின் பேரில் மாநகரில் உள்ள பழைய சிக்னல்களில் உள்ள எல்சிடி., பல்புகள் அகற்றப்பட்டு, பகல் நேரத்திலும் அதிக வெளிச்சம் தரக்கூடிய லீடு(எல்இடி.,) பல்புகள் பொருத்தும் பணிநடைபெற்று வருகிறது. இந்த பல்புகள் பொருத்தப்பட்ட சிக்கனல்கள் சுமார் 200 மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரியக் கூடியதாகும். இதனால் வாகன ஓட்டிகள் தொலைவில் வரும் பொழுதே எந்த நிற சிக்னல் உள்ளது என்பதை அறிந்து ஜங்ஷனை கடந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து குழப்பம் தவிர்க்கப்படுகிறது.
தற்போது சிவப்பு, மஞ்சள் நிற சிக்கல்களில் தலா 190 எல்இடி., பல்புகளும், பச்சை நிற ஆரோ சிக்னலில் 66 எல்இடி., பல்புகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர ஒரு சில சிக்னல்களில் டைம்மர்(நேரம்) பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவப்பு மற்றும் பச்சை நிற டைம்மருக்கு தலா 210 எல்இடி., பல்புகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய சிக்னல்கள் வாகன ஓட்டிகளிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது;நெல்லை மாநகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கமிஷனர் உத்தரவின் பேரில் பழைய சிக்னலில் உள்ள எல்சிடி., பல்புகளுக்கு பதிலாக அதிக வெளிச்சம் கொண்ட எல்இடி., பல்புகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிக்னல்கள் 200 மீட்டர் தொலைவில் வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கும் தெளிவாக சிக்னல் தெரியும். மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு சமாதானபுரம் ஜங்ஷன், கோர்ட் அருகில், டவுன் சாப்டர் பள்ளி போன்ற பகுதிகளில் சிக்னல்கள் விரைவில் அமைக்கப்படவுள்ளன.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
29-Sep-2025
25-Sep-2025