மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
குற்றாலம்:கடந்த ஜூன் 1ந்தேதி குற்றாலத்தில் சீசன் தொடங்கிய நாள் முதல் தமிழ்நாட்டில் விளையக்கூடிய பலாப்பழங்களுக்கு பண்ருட்டி பலாப்பழம் போல் நல்ல மசுவு இருந்துவந்தது.ஆனால் தற்போது தமிழ்நாடைவிட கேரளாவில் சக்கைப்பழம் என்றழைக்கப்படும் பலாப்பழங்கள் அதிக விலைச்சல் காரணமாக பலாப்பழக்களை பறிக்ககூட ஆளில்லாததாலும், அதிக சம்பளம் கொடுத்து பறிக்க வேண்டியதிருப்பதாலும் கேரளாவில் மக்கள் பலாப்பழங்களை பெரிதும் விரும்புவதில்லை. ஓணம் மற்றும் பண்டிகை போன்ற நாட்களில் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். மற்ற நேரங்களில் பலாப்பழத்தை பயன்படுத்துவதில்லை என்பதால் பலாப்பழங்களை கேரளாவில் வாங்குவதற்கு கூட ஆளில்லை. வீட்டு வீடு பலா மரங்கள் நிறந்து காணப்படும்.தமிழ்நாட்லிருந்து லாரிகள் மூலம் பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு பொருட்களை இறக்கிவிட்டுவரும்போது வாகனம் காலியாக இருக்கும் இதை கருத்தில் கொண்ட டிரைவர்கள் ஒரு பலாப்பழத்தை 5 ரூபாய்முதல் 10 ரூபாய் வரை குவியல் குவியலாக வாங்கி குற்றாலத்திற்கு கொண்டுவந்து ஒரு பழம் ரூ.75 முதல் 100ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. சில்லரையாக 10 ரூபாய்க்கு 7 முதல் 10 சுளைகள் விற்கப்படுகிறது.தற்போது தற்போது கேரளாவிலிருந்து பலாப்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் குற்றாலத்தில் பலாப்பழம் அமோக விற்பனை ஆகிறது. எந்தா சாரே சக்கைப்பழம் வேனுமா எனகேரளா வியாபாரிகள் கேட்கின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து அருவி வரை ரோட்டின் இருபுறங்களிலும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கிறது.
29-Sep-2025
25-Sep-2025