உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி கோயில்களில்பிரதோஷ வழிபாடு

தென்காசி கோயில்களில்பிரதோஷ வழிபாடு

தென்காசி:தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.சிறப்பு அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.தென்காசி குலசேகரநாதர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். மேலசங்கரன்கோயில், கீழ சங்கரன்கோயில், இலஞ்சி குமாரர் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ