மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:நெல்லை மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் பதிவாகும் வழக்குகளில் கோர்ட்டில் தண்டனை பெறுபவர்கள், கைது செய்யப்படும் விசாரணைக் கைதிகள் இங்கு அடைக்கப்படுவர்.சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க சிறைக்காவலர்கள் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவர். கைதிகளின் பின்னணியை அறிந்து உரிய பிளாக்குகளில் அவர்களை அடைப்பர். இதையும் மீறி கைதிகளுக்கு இடையே அவ்வப்போது கைகலப்பு, தகராறு ஏற்படும் சம்பவங்கள் நடக்கின்றன.நாகர்கோவில், வடசேரி போலீசார் கஞ்சா பறிமுதல் வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த விசாரணை கைதிகள் சாஜி, அருள்துளசி நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கும், வேறு வழக்கில் சிறையில் இருக்கும் இதர கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாஜி, அருள்துளசியை அந்தக் கைதிகள் தாக்கினர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் சிறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.சிறை பொறுப்பு துணை ஜெயிலர் முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, விசாரணைக் கைதிகள் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
29-Sep-2025
25-Sep-2025