உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வண்ணார்பேட்டையில் 300 லிட்டர்ரேஷன் கெரசின் பறிமுதல்; மூவர் கைது

வண்ணார்பேட்டையில் 300 லிட்டர்ரேஷன் கெரசின் பறிமுதல்; மூவர் கைது

திருநெல்வேலி:வண்ணார்பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட 300 லிட்டர் ரேஷன் கெரசின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர்.வண்ணார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கெரசின் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உணவுபொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் நேற்று வண்ணார்பேட்டை பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் சண்முகம் என்பவரது வீட்டில் 300 லிட்டர் கெரசின் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சண்முகம், லாரி டிரைவர் சுந்தர், புரோக்கர் முருகன் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேறு எந்தந்த பகுதிகளுக்கு கெரசின் சப்ளை செய்தனர் என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ