உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கோயில் யானை

தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய கோயில் யானை

திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் முன்பாக சுதந்திர தினத்தையொட்டி நேற்று காலை தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் யானை காந்திமதி அலங்கரித்து கொண்டு வரப்பட்டது. பாகன் ராமதாஸ் கொடுத்த மவுத் ஆர்கனை அவர் கூறும்போதெல்லாம் வாசித்தது. கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியேற்றினார். அப்போது யானை துதிக்கையை துாக்கி வணங்கி மரியாதை செலுத்தியது. கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை